தமிழக அரசு சார்பில் திருச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 850 அங்கன்வாடி மையங்களில் 11 ஆயிரத்து 788 கர்ப்பிணிகள் பதிவு செய்து பயனடைந்து வருகின்றனர். மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 650 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் 320 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி நடத்தி வைத்தார். இதில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு, ஐந்து வகையான உணவுகள் பரிமாறப்பட்டு, கர்ப்ப கால பராமரிப்பு குறித்த கையேடு மற்றும் தாம்பூலம் வழங்கப்பட்டது.