ஏழைகளின் வளர்ச்சிக்காக தமிழக அரசு பாடுபடும் – முதலமைச்சர்

இந்தியாவின் 72வது சுதந்திர தினம், நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கோட்டை கொத்தளத்தில், காவலர்களின் அணிவகுப்பை மரியாதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார். பின்னர், தேசிய கொடி ஏற்றி வைத்து முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வணக்கம் தெரிவித்து, சுதந்திர தின உரையை தொடங்கினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை நினைவு கூர்ந்து, அவர்களை போற்றி புகழ வேண்டும் என்றும் சூளுரைத்தார். சுதந்திர போராட்டத்தில் தமிழகம் தான் அதிகம் பங்கெடுத்தது என்று முதலமைச்சர் பழனிசாமி பெருமையோடு நினைவுகூர்ந்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் ஏழைகளின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பாடுபட்டு வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version