சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கொந்தகை கிராமத்தில் கீழடி அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கீழடி அகழாய்வில் கிடைக்கப்பட்ட பண்டைய கால பொருட்கள் காட்சி படுத்த அங்கேயே 12 கோடி ரூபாய் செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் 2019-20 ஆம் ஆண்டில் 30 லட்ச ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து 2020-21 ஆம் நிதியாண்டில் 11 கோடியே 91 லட்சம் ரூபாய்க்கு நிதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதில், ஒப்பனை அறை, நிர்வாக கூடம், சேமிப்பு கிடங்கு, சிற்றுண்டி கடை மற்றும் நூல் விற்பனை கடையுடன் கூடிய விரிந்த அகழ்வைப்பக வளாகம் அமைக்கப்பட உள்ளது. மேலும், 64 லட்சம் ரூபாய் செலவில் பார்வையாளர் பயனீட்டு தொடர்பான விளக்க அட்டை, குடிநீர் மையங்கள், உள்ளிட்டவைகளுக்காக தேவையான நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.