பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு திண்டுக்கல் அனுமந்தநகரில் மேம்பாலம் அமைத்த தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் 80க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இதனால் அனுமந்த நகர் ரயில்வே கேட் பகுதியில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதையடுத்து அனுமந்த நகரில் தமிழக நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. அனைத்து பணிகளும் நிறைவுபெற்றதை தொடர்ந்து கடந்த 21ஆம் தேதி மேம்பாலத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதனால் நீண்டநேரம் காத்திருக்காமல் விரைவாக செல்ல முடிவதாக கூறும் பொதுமக்கள், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.