கர்நாடகாவில் ஊரடங்கு சமயத்தில், பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டுதல்களை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
கர்நாடக உயர்நீதிமன்ற அறிவுறுத்தல் படி இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி, மழலையர் வகுப்புக்களுக்கு வாரத்தில் 30 நிமிடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு நாள் இடைவெளி விட்டு 3 நாட்கள், தினமும் 45 நிமிடங்களை 2ஆக பிரித்து 2 வகுப்புகளாக நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று 5 முதல் 8 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 5 நாட்கள், தினமும் 45 நிமிடங்களை 2 ஆக பிரித்து 2 வகுப்புகள் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, வாரத்தில் 5 நாட்களுக்கு தினமும் 45 நிமிடங்களை, 4 வகுப்புகளாக நடத்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.