ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலையில் 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களில் லிங்காயத்தார் எனும் சமூகத்தினர் தங்கள் வீட்டை தவிர வெளியில் சாப்பிடாதவர்கள் என்பதால் தங்கள் பெண்களை பிரசவத்திற்காக 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது 7 நாட்கள் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலையில், உணவுக்காக மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இதனைக் கருத்தில் கொண்ட தமிழக அரசு பிரசவ வார்டுக்கு அருகில் மலைவாழ் மக்கள் உணவு சமைக்க, சமையல் கூடம் ஒன்றை அமைத்துக் கொடுத்திருக்கிறது.
பர்கூர் மலையில் இருந்து பிரசவத்திற்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கும் பெண்கள், தாய் வீட்டிற்கு வந்து பிரசவம் பார்த்து செல்வதுபோல் வசதியாக உள்ளது என்று தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.