அரசு, ஊராட்சி ஒன்றிய சாலைகளில் ஆற்றுப்பாலங்கள் அமைக்கும் பணி : நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் ஆற்றுப்பாலங்கள் அமைக்க 210 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நபார்டு வங்கி உதவியுடன் 152 ஆற்றுப்பாலங்கள் கட்டப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில், முதற்கட்டமாக 79 ஆற்றுப்பாலங்களை கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக தற்போது, 210 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு 168 கோடி ரூபாய் நபார்டு வங்கியும், 42 கோடி ரூபாய் அரசின் பங்கீடாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இதற்கான பணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கவுள்ளது.

Exit mobile version