புதுக்கோட்டை மாவட்டம், சுனைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கல்விச்சீராக பெற்றோர்கள் மற்றும் கிராமத்தினர் வழங்கினர். ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளிக் கல்வி இயக்குனரகம் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் கல்விச் சீர்விழா நடைபெற்று வருகிறது. அதன்படி, அறந்தாங்கி அருகேயுள்ள சுனையக்காடு கிராமத்தில் உள்ள உயர் நிலைப்பள்ளிக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கிராமத்தினர் மற்றும் பொதுமக்கள் மேள தாளம் முழங்க, ஊர்வலமாக எடுத்துச் சென்று கல்விச்சீராக வழங்கினர்.
கணிணி முறையில் பாடம் நடத்த புரொஜெக்டர், பள்ளிக்குத் தேவையான பீரோ, மின் விசிறி, சோபா செட், சேர், இன்வெர்டர், மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட 54 வகை பொருட்கள் பள்ளி நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.