அதிக கிலோ மீட்டர் தூரத்திற்கு கிராம சாலைகளை அதிமுக அரசு அமைத்துள்ளதாக, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
திருவாடனை தொகுதி உறுப்பினர் கருணாஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், புத்தூர் கிராமத்தில் புதிய கலையரங்கம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழகத்தில் ஒரு லட்சத்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரமாக இருந்த கிராம சாலைகளை, அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன் ஒரு லட்சத்து 49 ஆயிரம் கிலோ மீட்டர் தூரமாக உயர்த்தியதாக கூறினார்.