சர்க்கரை அட்டையிலிருந்து அரிசி அட்டைக்கு மாறிய பயனாளிகளுக்கு, கூடுதலாக அரிசி வழங்க சுமார் ரூ.605 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 10, 19, 491 சர்க்கரை குடும்ப அட்டைத்தாரர்கள், அரிசி குடும்ப அட்டைத்தாரர்களாக மாற்றிக் கொள்ள தமிழக அரசு கால அவகாசம் வழங்கியிருந்தது. இதையடுத்து, 4, 50 ,000 பேர் மட்டும் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களாக மாற்றிக் கொள்ள விண்ணப்பித்தனர்.
அதன்படி, புதியதாக அரிசி குடும்ப அட்டைத்தாரர்களாக மாறிய பயனாளிகளுக்கு, 20 , 389 மெட்ரிக் டன் அரிசி கூடுதலாக வழங்க வேண்டும். அவ்வாறு வழங்குவதற்காக, மாதம் ஒன்றுக்கு சுமார் 50 கோடி ரூபாய் வீதம், வருடத்திற்கு சுமார் 605 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.