கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கீடு

சென்னையை அடுத்த பேரூரில் 400 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக 6 ஆயிரத்து 78 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களை தமிழக அரசு முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே கடல்நீரை குடிநீராக்கும் இரண்டு ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், மூன்றாவதாக சென்னையை அடுத்த பேரூரில் 400 எம்.எல்.டி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், இந்த திட்டத்திற்காக 6 ஆயிரத்து 78 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை உடனடியாக தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

Exit mobile version