அறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கல்லை அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், முதன்முறையாக பெண்ணின் சிறுநீரகத்தில் இருந்த கல்லை  அறுவை சிகிச்சை இன்றி, எண்டோஸ்கோப்பி முறையில் அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தஞ்சாவூரைச் சேர்ந்த மாலா என்ற பெண் தனக்கு ஏற்பட்ட வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வலது பக்க சிறுநீரகத்தில் கல் இருப்பதைக் கண்டறிந்து, அதை அறுவை சிகிச்சை இல்லாமல் எண்டோஸ்கோப்பி முறையில் அகற்ற தீர்மானித்தனர். இதனையடுத்து, கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி அன்று எண்டோஸ்கோப்பி மூலம் நான்கு மணி நேரம் நடந்த சிகிச்சையில், மாலாவின் சிறுநீரகத்தில் இருந்த கல் உடைக்கப்பட்டு, பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டது. இதுகுறித்து பேசிய மருத்துவமனை முதல்வர் டாக்டர் மீனாட்சிசுந்தரம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளதாகவும், தனியார் மருத்துவமனைகளில் இதற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகலாம்” என்றும் தெரிவித்தார்.

Exit mobile version