அரசு பேருந்து நடத்துனரிடம் நூதன முறையில் பணம் கொள்ளை

அரசு பேருந்து நடத்துனரிடம் நூதன முறையில் 6 ஆயிரத்து 840 ரூபாய் பணத்தை 3 இளைஞர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே, கடலூரிலிருந்து திருச்சி செல்லும் அரசு பேருந்தின் நடத்துனரிடம் 3 பேர் கொண்ட கும்பல் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அப்போது பேருந்தில் வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்த நடத்துனர் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அப்போது பெண்ணாடம் பகுதியில் 3 இளைஞர்கள் பேருந்தின் பின் பக்கம் ஏரி படிக்கட்டில் பயணம் செய்துள்ளனர். பின்னர் வழித்தட பேருந்து நிலையம் அருகே நடத்துநர் ஓரமாக நின்று கொண்டிருந்த நேரம் பார்த்து அவரது பணப்பையை பிடிங்கி அதிலிருந்து 6 ஆயிரத்து 840 ரூபாயை பறித்து கொண்டு தப்பினர். தப்பியோடிய மூவரையும் போலீசார், அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.

Exit mobile version