வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் காயமடைந்தனர். பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த அரசுப் பேருந்து வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சோலூரில் வந்துக் கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்புகளில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 40 பேர் படுகாயம் அடைந்தனர். பலத்த காயங்களுடன் 20க்கும் மேற்பட்டோர் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பேருந்து கவிழ்ந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், மீட்ப்பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.