மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் அரசுப் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
துலே மாவட்டத்தில் நிம்குல் என்னுமிடத்தில் நேற்றிரவு அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின. இந்த விபத்தில் இரு வாகனங்களின் முன்பகுதியும் உடைந்து நொறுங்கி உருக்குலைந்தன. விபத்தில் பேருந்து ஓட்டுநர், லாரி ஓட்டுநர், பயணிகள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த இருபது பேர் துலே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.