ஒசூரை தொழிற்வளர்ச்சி பெற்ற நகரமாக உருவாக்குவதே அரசின் இலக்கு: அமைச்சர் எம்.சி.சம்பத்

ஒசூர் நகரை அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய தொழிற்வளர்ச்சி பெற்ற நகரமாக உருவாக்குவதே தமிழக அரசின் திட்டம் என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பெங்களூவை சேர்ந்த எலக்ட்ரிக் பைக் நிறுவனம், 635 கோடி ரூபாய் மதிப்பில் ஓசூரில் தொழிற்சாலை தொடங்க உள்ளதாகவும், இதன் மூலம் 4 ஆயிரம் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.

மேலும், ஒசூர் தொகுதியில் தொழில் முனைவோர்கள் ஆர்வமுடன் தொழில் முதலீடு செய்ய முன்வந்தால், டிட்கோ நிறுவனத்துடன் இணைந்து தொழிற்சாலைகள் தொடங்கலாம் என்று தெரிவித்தார்.

இதேபோல், சட்டப்பேரவையில் உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளிக்கையில், ஜெயங்கொண்டம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பதில், கசடு கழிவு திட்டம் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version