சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை 5 ஆண்டுக்குள் முழுவதுமாக தீர்க்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாகவும், இதன் மூலம் குடிநீர் பஞ்சம் இல்லாத நகரமாக சென்னை மாறும் என்றும் மெட்ரோ குடிநீர் வாரிய மேற்பார்வை பொறியாளர் ராமசாமி கூறியுள்ளார்.
சென்னை சூளைமேட்டில் துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியை தனியார் தொண்டு நிறுவனம் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் காவல்துறை துணை ஆணையர் சிவகுமார், மெட்ரோ குடிநீர் வாரிய மேற்பார்வை பொறியாளர் ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் துப்புரவு பணியாளர்களுக்கு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அப்போது பேசிய மெட்ரோ குடிநீர் வாரிய மேற்பார்வை பொறியாளர் ராமசாமி, மக்கள் தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும் என்றும், 5 ஆண்டுகளுக்குள் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக கூறினார்.
விழாவில் பேசிய காவல் துணை ஆணையர் சிவக்குமார், காவல் ஆணையர் அறிவுறுத்தல்படி சூளைமேடு பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்றும், இதற்கு பொதுமக்கள் முழு ஆதரவை வழங்கி வருவதாக கூறினார்.
Discussion about this post