கூகுள் நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பாக நெஸ்ட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
கூகுள் நிறுவனம் கணினி, ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து தனது அடுத்த தயாரிப்பாக கூகுள் அசிஸ்டண்ட் உதவியுடன் இயங்கக்கூடிய புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கரை பிக்சல் 4 சீரிஸுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனம் கடந்த அக்டோபரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. நெஸ்ட் மினி ஸ்பீக்கர் கூகுள் ஹோம் மினி மாடலை விட இருமடங்கு சிறப்பு வாய்ந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஹார்டுவேரை சிறப்பான வகையில் பயன்படுத்துவதற்கு ஏற்ப ஆடியோ டியூனிங்-கில் மென்பொருள் ஒன்றை கூகுள் பொறியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். இதன் விலை ரூ. 4,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்பீக்கரை அதிக சத்தம் உள்ள பகுதியிலும் நீங்கள் உபயோகிக்கலாம். ஏனெனில் வெளிப்புற சத்தத்தை இது கண்டறிந்து அதற்கேற்ப தனது ஒலி சேவைகளை வழங்குகிறது.இதில் உள்ள பிராக்சிமிட்டி சென்சார் பயனாளர்கள் தங்கள் கைகளை அருகில் கொண்டு செல்லும் போது தானாக எல்.இ.டி.யை இயக்குகிறது. இந்தியாவில் கூகுள் நெஸ்ட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர் சாக் மற்றும் சார்கோல் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.