கூகுள் பிளஸ் வலைதளம் ஏப்ரல் 2ம் தேதி முதல் நிரந்தரமாக நிறுத்தப்படுகிறது…

கூகுள் பிளஸ் கணக்கு வைத்திருப்போர் உங்களின் தகவல்களை சேமித்து கொள்ளும்படியும் கூகுள் நிறுவனம் அறிவுறுத்தி இருந்தது. காரணம் வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் கூகிள் பிளஸ் நிரந்தரமாக நிறுத்தப்படுகிறது.

ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களுக்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தால் கூகுள் பிளஸ் வலைதளம் தொடங்கப்பட்டது.

இருப்பினும் ஃபேஸ்புக், டிவிட்டர் அளவுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

இதனால் வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் கூகுள் பிளஸ் நிரந்தரமாக மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

Exit mobile version