தற்போது அனைத்திற்கும் Google Pay வை தான் பயன்படுத்துகிறோம். இது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதை அதிகமாக உபயோகிக்கும் பயணாளிகளுக்கு அவ்வப்போது ரூ.10 முதல் 100 வரை Google Pay நிறுவனம் சன்மானமாக வழங்கி வருகிறது.
இந்நிலையில், ரூ.100 வரை மட்டுமே வழங்கி வந்த Google Pay புத்தாண்டு 2020 ஐ முன்னிட்டு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கூகுள் பேவை அதிகமாகப் பயன்படுத்தும் நபர்களுக்கு ரூ.202 முதல் ரூ.2020 முதல் பெறலாம் என்று தெரிவித்துள்ளது. இதுவெல்கம் 2020 என்று அழைக்கப்படுகிறது. அந்த பணத்தை நீங்கள் பெறுவதற்கு, Google Pay வை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும். அப்படி நீங்கள் செய்தால், ஒவ்வொரு முறையும் கூகுள் பே உங்களுக்கு வவுச்சர்கள் அல்லது ஸ்கிராட்ச் கார்டு வழங்கும்.அதுமட்டும்மல்லாமல் உங்களுக்கு 7 ஸ்டிக்கர்கள் கிடைக்கும்.
அதில் ஒவ்வொரு முறை பணப்பரிமாற்றம் செய்யும் போதும் ஒவ்வொரு ஸ்டிக்கர் ஆக திறந்து கடைசியில் ரூ.202 முதல் ரூ.2020 வரை வெகுமதி கிடைக்கும். இந்த சலுகை வரும் ஜனவரி 1 ஆம் தேதி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.