லீப் டேவை கொண்டாடும் விதமாக கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டது

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் லீப் டேவை கொண்டாடும் விதமாக கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது..

பொதுவாக சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வர 365 நாட்கள் ஆகும். கூடுதலாக உள்ள 6 மணி நேரத்தை 4 ஆண்டுகள் சேர்த்து 24 மணி நேரமாக அதாவது ஒரு நாளாக பிப்ரவரி மாதத்தில் இணைத்து லீப் டேவாக கொண்டாடிவருகிறோம்.4 ஆல் மீதியின்றி வகுபடும் வருடம் லீப் வருடம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு வந்துள்ள இன்றைய பிப்ரவரி 29 ஐ  சிறப்பிக்கும் வகையில் வ கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு முக்கிய நாள்களையும் கூகுல் சிறப்பித்து வரும் நிலையில் தற்போது லீப் ஆண்டை சிறப்பித்த கூகுளின் டூடுல் இணைய வாசிகளை கவர்ந்துள்ளது.

Exit mobile version