நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் லீப் டேவை கொண்டாடும் விதமாக கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது..
பொதுவாக சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வர 365 நாட்கள் ஆகும். கூடுதலாக உள்ள 6 மணி நேரத்தை 4 ஆண்டுகள் சேர்த்து 24 மணி நேரமாக அதாவது ஒரு நாளாக பிப்ரவரி மாதத்தில் இணைத்து லீப் டேவாக கொண்டாடிவருகிறோம்.4 ஆல் மீதியின்றி வகுபடும் வருடம் லீப் வருடம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு வந்துள்ள இன்றைய பிப்ரவரி 29 ஐ சிறப்பிக்கும் வகையில் வ கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு முக்கிய நாள்களையும் கூகுல் சிறப்பித்து வரும் நிலையில் தற்போது லீப் ஆண்டை சிறப்பித்த கூகுளின் டூடுல் இணைய வாசிகளை கவர்ந்துள்ளது.