பெற்றோர்களின் அனுமதியின்றி குழந்தைகள் பற்றிய தகவல்களை வலைதளங்களில் வெளியிட்ட கூகுள் நிறுனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் யூடியூபில் அமெரிக்காவைச் சேர்ந்த சில குழந்தைகளை பற்றிய தகவல்கள் இடம்பெற்றிருந்தன. பெற்றோர்களின் ஒப்புதல் இல்லாமல் குழந்தைகளின் விவரங்கள் வெளியிடப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, அமெரிக்க நுகர்வோர் உரிமை அமைப்பில், வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த அமெரிக்க நுகர்வோர் உரிமை அமைப்பு சிறுவர்களை பற்றிய தகவல்களை பயன்படுத்தியதற்காக, கூகுள் நிறுவனத்துக்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய் அபராதம் விதித்தனர். குழந்தைகளை பற்றிய தகவல்களை பாதுகாக்கும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.