ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 3 லட்சம் கோடி அபராதம்

பயனாளர்களின் ரகசிய தகவல்களை திருடிக் கொடுத்ததாக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 3 லட்சம் கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் உள்ள பல பிரபல வலை தளங்களில் முன்னிலையில் இருப்பது பேஸ்புக் மட்டுமே என்று கூற முடியும். இந்நிலையில் கேம்பிரிட்ஜ் அனலெட்டிகா எனும் அரசியல் ஆலோசனை நிறுவனத்துக்கு, ஃபேஸ்புக் பயனாளர்களின் ரகசிய தகவல்களை திருடிக் கொடுத்ததாக பேஸ்புக் நிறுவனம் மீது அண்மையில் புகார் எழுந்தது. இதற்கு பதிலளித்த ஃபேஸ்புக் நிறுவனம், பயனாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் நிறுவனம் திருடியது உண்மைதான் என்றும், இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்றும் கூறியிருந்தது.

இந்த புகாரின் முழு விவரம் அறிய அமெரிக்க வர்த்தக ஆணையம் கடந்த மார்ச் மாதம் விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணையில், ஃபேஸ்புக் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதனையடுத்து அந்நிறுவனத்துக்கு சுமார் 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை, பேஸ்புக் நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருமானத்தில் 9 சதவீதம் ஆகும்.

Exit mobile version