WWE-யில் கள நடுவரை தாக்கிய பெண்ணுக்கு அபராதம் விதிப்பு

மல்யுத்தம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது WWE தான். தொழில் முறை மல்யுத்தமாக நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ள தனியார் ஊடகம் ஒன்று இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது.

இந்நிலையில், போட்டியில் பங்கேற்ற பெண் ஒருவர், நாற்காலியை கொண்டு நடுவரை தாக்கியதால் 10,000 டாலர் அபராதமாக விதிக்கப்பட்டது. கடந்த ஞாயிறு அன்று பெண்களுக்கான மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. இதில், “தி மேன்” என்று அனைவராலும் அழைக்கப்படும் பெக்கி லிஞ்ச் பங்கேற்றார். இவரை எதிர்த்து சாஷா சண்டையிட்டு வந்தார்.

சண்டையிடும் நபர்கள், கையில் கிடைப்பதை எல்லாம் தூக்கி அடிப்பார்கள். இதேபோல் தான், பெக்கி லிஞ்ச்சும் நாற்காலியை வைத்து தாக்க முயன்ற நிலையில் சாஷா விலகி சென்றார். இதில், எதிர்பாராத விதமாக கள நடுவர் தாக்கப்பட்டதால், பெக்கி லிஞ்சிற்கு 10,000 டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7 லட்சம்) அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும், போட்டியில் இருந்து பெக்கி லிஞ்ச் நீக்கப்பட்டதை அடுத்து, சாஷா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இந்த தகவல், WWE ட்வீட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version