இன்றைய கூகுள் பக்கத்தை பார்த்தால் அதில் ஒரு பெண் ஏழு மலைகளைத் தாண்டி செல்வது போல் ஒரு அனிமேஷன் வீடியோ இருப்பதை பார்த்திருப்பீர்கள். அவர்தான் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி ஜூங்கோ தபே. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
ஜப்பானை சேர்ந்த ஜூங்கோ தபே உலகின் ஏழு கண்டங்களில் உள்ள மலைச்சிகரங்களிலும் ஏறி சாதனைப்படைத்துள்ளார். ஏழு குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவது மகளாக பிறந்த இவர், மிகச் சிறிய வயதிலேயே மலைகள் ஏறத் தொடங்கினார். இதுவரை 76 நாடுகளில் மலை உச்சியை அடைந்த பெண்மணியும் இவரே.
1975ல் எவரெஸ்ட் பயணத்தை 15 பேருடன் தொடங்கினார். கிட்டத்தட்ட 9,000 அடி (2,743.2 மீட்டர்) உயரத்தில், அவர்களின் முகாம் ஒரு பனிச்சரிவால் புதைக்கப்பட்டது. 3 நாட்களுக்கு மீட்கப்பட்ட தபே வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார்.
அவர் எப்போதும் மக்களுக்கு “பின் வாங்காமல் உங்கள் தேடலைத் தொடருங்கள்” என்ற அறிவுரையே வழங்கினார். அதுவே அவர் சாதனை படைக்க உந்துதலாக இருந்தது. மேலும் அவர் எவரெஸ்ட்டை அடைந்ததற்கு ஜப்பானின் பேரரசர், இளவரசியிடமிருந்து பாராட்டை பெற்றார்.
திருமணத்திற்கு பிறகும் பல்வேறு மலையேற்றத்தில் பங்கேற்ற ஜூங்கோ தபே தனது 77வது வயதில் மரணமடைந்தார்.