இந்தியாவில் வருமானத்தை அள்ளும் கூகுள்

இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் வருமானம் விரைவில் ரு.10,000 கோடியை எட்டும் என தெரிய வந்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள் வந்த பிறகு பெரும்பாலானோர், இணையதளமே கதியென கிடக்கிறார்கள். இதனால் நமக்கு லாபமா? இல்லையா? என தெரியாது. ஆனால் கூகுளுக்கு பெருத்த லாபம் என தெரிய வந்துள்ளது

கூகுள் இந்தியா நிறுவனம் கடந்த நிதியாண்டில் மட்டும் 9 ஆயிரத்து 338 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைக்காட்டிலும் 29% வளர்ச்சியாகும்.

கடந்த 2016-17-ம் நிதியாண்டில் கூகுள் இந்தியா நிறுவனத்தின் வருவாய் ரூ.7,239 கோடியாக இருந்தது. கூகுள் நிறுவனத்தின் மொத்த விற்றுமுதலில் 69% பங்களிப்பு விளம்பர வருவாய் வாயிலாக மட்டுமே கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version