வரி ஏய்ப்பில் ஈடுபட்ட கூகுள் நிறுவனம், அபராத தொகையுடன் சேர்த்து 7 ஆயிரத்து 592 கோடி ரூபாயை பிரான்ஸ் அரசுக்கு செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் கிளை பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் இயங்கி வருகிறது. கூகுள் நிறுவனம் 2016ஆம் ஆண்டு சுமார் 13 ஆயிரம் கோடி வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்திய பிரான்ஸ் அரசு, 2 ஆண்டுகளுக்கு மேலாக கூகுள் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை கண்டுபிடித்தது. இந்த நிலையில், வரி ஏய்ப்பு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர, கூகுள் நிறுவனம் பிரான்ஸ் அரசுடன் சமரசம் செய்து கொண்டது. வரி ஏய்ப்பு அபராத தொகையான 3 ஆயிரத்து 933 கோடி ரூபாயும், வரி பாக்கி தொகையான 3 ஆயிரத்து 659 கோடி ரூபாயும் வழங்க கூகுள் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.