21- வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்

நமது வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ள கூகுள், தன்னுடைய 21ஆம் பிறந்த நாளை கொண்டாடி வருகிறது. தகவல்களை அள்ளித்தரும் கூகுள் பற்றிய தகவல்கள்

இன்றைய இளைய தலைமுறையினர், தங்களது ஹீரோக்களைக் கூட, வருடத்திற்கு ஒருவர் என்று மாற்றுகின்றனர். ஆனால், ஒன்றை மட்டும் மாற்றாமல் வைத்திருக்கிறார்கள் என்றால், அது “Google”. அப்படியா? எனக்கு தெரியாது என்ற வார்த்தையை தற்போதைய கால கட்டத்தில் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. ஏனென்றால், நமக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்றால், அதை Google-லிடம் கேட்டால் சொல்லிவிடும் என்ற நம்பிக்கை தற்போதுள்ள இளைஞர்களிடம் இருக்கிறது.

Google நமது வாழ்க்கையோடு ஒன்றிப் போய் இருக்கிறது. எந்த மொழியில், எந்தக் கேள்வி கேட்டாலும், அடுத்த நொடி அதை நமக்கு கற்றுத தரும் கூகுள், 1998, செப்டம்பர் 4 ஆம் தேதி, அதனுடைய நிறுவனர்களான லாரி பேஜூம், செர்ஜி பிரினுவால் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், செப்டம்பர் 27 ஆம் தேதியைத்தான் பிறந்தநாளாக கொண்டாடுகிறது. தற்போது நம்மில் ஒருவராகவே மாறியுள்ள கூகுள், 21ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

கூகுளின் சிறப்பான விஷயங்களில் முதலிடம் பிடிப்பது ( Doodle ) டூடுல்கள்-தான். பிரபலங்களின் பிறந்தநாள், வரலாற்றின் முக்கிய தினங்கள், பிரபல விளையாட்டுப் போட்டிகள் என அனைத்திற்கும் கூகுளின் முகப்புப் பக்கத்தில், டூடுல் ஒன்றை வைத்துக் கௌரவிப்பது வழக்கம்.

இது முதன் முதலாக , 1998 ஆம் ஆண்டு, கூகுள் முகப்புப் பக்கத்தில் ‘Burning Man’ டூடுல் வைக்கப்பட்டது. கூகுளின் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரும், நொவாடா பாலைவனத்தில் நடைபெறும் ‘Burning Man Festival’ என்ற திருவிழாவில் கலந்து கொள்ள விரும்பினார்கள். அந்த நேரத்தில் கூகுளின் சர்வர் பழுதடைந்ததால், அதை கூகுள் வாடிக்கையாளர்களுக்கு எப்படித் தெரிவிப்பது என்று யோசித்தனர்.

அந்த யோசனையின் பலனாக வந்ததுதான் இந்த ‘Burning Man’ டூடுல். Burning Man லோகோவை கூகுள் லோகோவில் உள்ள இரண்டாவது ‘O’ விற்குப் பின்னால் குறியீடாக வைத்து, முதல் டூடுலை வடிவமைத்தனர். வாடிக்கையாளர்களும் இந்தக் குறியீட்டை புரிந்துகொண்டனர். அதன்பிறகு, பல்வேறு டூடுல்களை உருவாக்கியது கூகுள் நிறுவனம்.

கடந்த 20 வருடங்களில், 2 ஆயிரம் டூடுல்களை வெளியிட்டிருக்கும் கூகுள், தற்போது தன்னுடைய 21வது ஆண்டை சிறப்பிக்கும் வகையில், 90களில் உள்ள முதல் தலைமுறை கம்பியூட்டரை வெளியிட்டு சிறப்பித்தது. இன்றும் இளைஞர்களின் கதாநாயகனாக கூகுள் இருந்து வருகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை…

Exit mobile version