கணினி உலகில் அன்ரோயிட் தனக்கென்று ஒரு தனி இடம் பெற்றிருக்கிறது. விண்டோஸ்-க்கு அடுத்ததாக அதிகமாக பயன்படுத்தும் சொல்லாக அன்ரோயிட் இருக்கிறது.
அந்த அளவிற்கு பல்வேறு வகையான எலக்ட்ரானிக் சாதனங்களிலும் இவ் இயங்குதளம் இடம்பிடித்துள்ளது இதற்க்கு முக்கிய காரணம்.
இந்த அன்ரோயிட் இயங்குதளம் முதன் முறையாக 2008 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
அறிமுகமாகி இந்த வருடத்துடன் 10 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.இதற்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு பதிப்புக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இன்று உலகெங்கிலும் சுமார் 200 கோடிக்கும் அதிகமான எலக்ட்ரானிக் சாதனங்களில் அன்ரோயிட் இயங்குதளம் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.