பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் சுவரில் சித்தரிக்கப்பட்ட ஓவியத்தை காண்பித்தவாறு ஆசிரியை ஒருவர் பாடம் நடத்தியது பெற்றோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு பல்வேறு இடங்களில் பாலியல் துன்புறுத்தல் அதிகரித்து வருவதைத் தடுக்கும் வகையில், அது தொடர்பான ஓவியங்களை சுவற்றில் வரைந்து, அந்த ஆசிரியை சிறப்பு பாடம் நடத்தினார்.
உடல் பாகங்களை வரைந்து, குட் டச், பேட் டச் என்பது குறித்து அவர் விளக்கினார். மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தலைமை ஆசிரியை தாமரை செல்வி, சிறப்பு வகுப்பெடுத்தது மாணவர்களின் பெற்றோரை நெகிழ்ச்சிடையச் செய்தது.