இயற்கை முறையில் முள்ளங்கி விவசாயம் செய்வதால் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்துள்ள செங்காடு மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது தோட்டத்தில் ஒரு எக்கருக்கு முள்ளங்கி சாகுபடி செய்துள்ளார், முள்ளங்கி சாகுபடி செய்ய 10 ஆயிரம் செலவு செய்திருப்பதாகவும், 35 கழித்து அறுவடை செய்து விற்பனை செய்வதாகவும், இதில் செல்வினங்கள் போக 35 ஆயிரம் வரை லாபம் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் முள்ளங்கி இயற்கை முறையில் சாகுபடி செய்ய அதிகளவில் தண்ணீர் தேவைப்படும் எனவும், இதனால் நல்ல விளைச்சல் அடைந்து லாபம் அதிகமாக கிடைக்குமென தெரிவித்துள்ளார்