நாகையில் சிவபெருமானுக்காக தங்கமீன் அர்ப்பணிக்கும் விழா

நாகையில், சிவபெருமானுக்காக கடலில்  தங்கமீன்அர்ப்பணிக்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார், தங்கமீனை கடலில் விட்டு, இறைவனின் திருக்காட்சியைப் பெற்ற ஐதீக விழா வியாழக் கிழமை நம்பியார் நகர் கடலில் நடைபெற்றது.இதில் தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் மற்றும் ஆட்சியர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக நீலயதாட்சியம்மன் கோவிலில் இருந்து பூஜிக்கப்பட்ட தங்கமீன் மற்றும் அதிபத்த நாயனாரின் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது சிவனடியார்கள் பம்பை மேளம் முழங்க, பத்தி பரவசத்துடன் தாண்டவ நடனமாடினர். அதனை தொடர்ந்து தங்கமீனுடன் படகில் நடுகடலுக்கு சென்ற மீனவர்கள், சிவபெருமானுக்காக கடலில் தங்க மீனை அர்ப்பணித்தனர்.

 

Exit mobile version