தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலரிவானுக்கு முதலமைச்சர் டுவிட்டரில் வாழ்த்து

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவானுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலின் இறுதிப்போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவான் 10 மீட்டர் ரைபிள் பிரிவில் 251 புள்ளிகள் எடுத்து தங்கம் வென்று அசத்தினார். இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஓலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே தனது இலக்கு என இளவேனில் வாலறிவான் தெரிவித்துள்ளார். இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தனது குடும்பத்தினருக்கும், பயிற்சியாளருக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில், இளவேனில் வாலறிவானுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடைய டுவிட்டர் செய்தியில், உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவானுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

Exit mobile version