இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 264 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 584 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாள்தோறும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கத்தின் விலை, இன்று அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி, 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 33 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், சவரனுக்கு 264 ரூபாய் அதிகரித்து 31 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 33 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 698 ரூபாய்க்கும், சவரனுக்கு 264 ரூபாய் அதிகரித்து  29 ஆயிரத்து 584 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து 49 ரூபாய் 80 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 400 ரூபாய் அதிகரித்து 49 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 

Exit mobile version