கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் சம்பவம்!!

கேரளாவில் கடுமையான ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தங்கக் கடத்தலில் கைதான முன்னாள் அரசு அதிகாரி ஸ்வப்னா, வெளிமாநிலத்துக்கு தப்பியது எப்படி என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளது.

கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் சம்பவத்தில் முன்னாள் அரசு அதிகாரி ஸ்வப்னாவை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஹோட்டலில் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் கடுமையான ஊரடங்கு அமலில் உள்ள சூழலில், ஸ்வப்னா கர்நாடகாவுக்கு தப்பியது எப்படி என, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்ல நுழைவு அட்டை தேவைப்படும் நிலையில், உயர் அதிகாரிகள் உதவியில்லாமல் ஸ்வப்னா தப்பிச் சென்றிருக்க வாய்ப்பில்லை என பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு ஸ்வப்னா தப்பியது மர்மமாக உள்ளது என, எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார்.

Exit mobile version