இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல்

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடத்தி வரப்பட்ட 5 கோடியே 50 லட்சம் மதிப்பிலான தங்கத்தை நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

நெடுந்தீவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர், அந்த பகுதியில் நின்ற படகை சோதனை செய்தனர். இதில், தங்க கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து யாழ்பாணம் மாவட்டம் மாதகல் பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்த இலங்கை கடற்படையினர் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். பின் படகில் பதுக்கி வைத்திருந்த 14 கிலோ 35 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 5 கோடியே 50 லட்சம் ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் யாழ்பாணம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் பொது மக்களின் நகைகளை திருடும் கும்பலிடம் இருந்து திருட்டு நகைகளை வாங்கி, அதனை உருக்கி கட்டிகளாக மாற்றி இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு கடல் வழியாக கடத்தி செல்லப்பட்டு சென்னை சேர்ந்த வியாபாரியிடம் கொடுக்க இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

Exit mobile version