சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.40,568-க்கு விற்பனை!!

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 232 ரூபாய் குறைந்து, 40 ஆயிரத்து 568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்றும் தங்கத்தின் விலை குறைந்து விற்பனையாகிறது. அதன்படி, 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து, 5 ஆயிரத்து 325 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 42 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு 29 ரூபாய் குறைந்து, 5 ஆயிரத்து 71 ரூபாய்க்கும், சவரனுக்கு 232 ரூபாய் குறைந்து, 40 ஆயிரத்து 568 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 74 ரூபாய் 10 காசுகளாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ஆயிரம் ரூபாய் குறைந்து, 74 ஆயிரத்து 100 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

Exit mobile version