நேற்று குறைந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 528 ரூபாய் அதிகரித்து 31 ஆயிரத்து 432 ரூபாய் என புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை நேற்று 424 ரூபாய் குறைந்த நிலையில், இன்று மீண்டும் 528 ரூபாய் அதிகரித்து புதிய உச்ச விலையை எட்டியுள்ளது. அதன்படி சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 66 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 122 ரூபாய்க்கும், சவரனுக்கு 528 ரூபாய் அதிகரித்து 32 ஆயிரத்து 976 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 66 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 929 ரூபாயாகவும், சவரனுக்கு 528 ரூபாய் அதிகரித்து 31 ஆயிரத்து 432 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.
அதேபோல் வெள்ளியைப் பொறுத்தவரை கிராமுக்கு 1 ரூபாய் 40 காசுகள் அதிகரித்து 52 ரூபாய் 60 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ஆயிரத்து 400 ரூபாய் அதிகரித்து 52 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.