சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 64 ரூபாய் அதிகரித்து, 28 ஆயிரத்து 816 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகிறது. இந்தநிலையில், சென்னையில் இன்று, 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 759 ரூபாயாகவும், ஒரு சவரன் 64 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 8 ரூபாய் அதிகரித்து, 3 ஆயிரத்து 602 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 64 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 816 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் 48 ரூபாய் 20 காசுகளுக்கும், கிலோ 48 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.