வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கம் விலை

தங்கம் விலை பவுன் ஒன்றுக்கு 30 ஆயிரத்து 520 ரூபாய்க்கு ஏற்றம் அடைந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 633 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து 51 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு 984 ரூபாய் அதிகரித்துள்ளது.  கடந்த 25 நாட்களில் தங்கம் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து, தற்போது 30 ஆயிரத்தை தாண்டி உச்சத்தை எட்டியுள்ளது.

Exit mobile version