வரலாறு காணாத உயர்வை தொட்ட தங்கம் விலை

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து 27 ஆயிரத்து 896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து 27 ஆயிரத்து 896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 27 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 487 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 10 காசுகள் குறைந்து, 45 ரூபாய் 70 காசுகளுக்கும், கிலோ ஒன்றுக்கு ஆயிரத்து 100 ரூபாய் குறைந்து 45 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version