சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 584 ரூபாய் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 4 அயிரத்து 177 ரூபாய்க்கு விற்ற நிலையில், 75 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 252 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 978 ரூபாயில் இருந்து 73 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 4 ஆயிரத்து 51 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளி கிராம் 51 ரூபாய் 60 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், 90 காசுகள் அதிகரித்து, 52 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியானது, 51 ஆயிரத்து 600 ரூபாக்கு விற்பனையான நிலையில், 900 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 52 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version