சென்னையில் தங்கத்தின் விலை குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாள்தோறும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கத்தின் விலை இன்று 64 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 11 ரூபாய்க்கும், சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து 32 ஆயிரத்து 88 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 820 ரூபாய்க்கும், சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 50 ரூபாய் 70 காசுகளுக்கும், கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து 50 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version