சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து, 41 ஆயிரத்து 248 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாக குறைந்து வரும் தங்கத்தின் விலை இன்றும் சற்று குறைந்துள்ளது. அந்த வகையில், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து, 5 ஆயிரத்து 415 ரூபாய்க்கும், சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து, 43 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து, 5 ஆயிரத்து 156 ரூபாயாகவும், சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து 41 ஆயிரத்து 248 ரூபாயாகாவும் விற்பனையாகிறது.
அதேபோல, வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் 60 காசுகள் குறைந்து 74 ரூபாய் 50 காசுகளாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 ஆயிரத்து 600 ரூபாய் குறைந்து 74 ஆயிரத்து 500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.