தொடர்ந்து உயரும் தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 40 ஆயிரத்து 296 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 24 ரூபாய் அதிகரித்து 5 ஆயிரத்து 286 ரூபாய்க்கும், சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்து 42 ஆயிரத்து 288 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 24 ரூபாய் அதிகரித்து 5 ஆயிரத்து 37 ரூபாய்க்கும், சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்து 40 ஆயிரத்து 296 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போல வெள்ளியின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து 72 ரூபாய் 90 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 72 ஆயிரத்து 900 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version