சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 296 ரூபாய் உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 296 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 37 ரூபாயும், சவரனுக்கு 296 ரூபாயும் அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் மூவாயிரத்து 369 ரூபாய்க்கும், சவரன் 26 ஆயிரத்து 952 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 37 ரூபாயும், சவரனுக்கு 296 ரூபாயும் அதிகரித்து, ஒரு கிராம் மூவாயிரத்து 526 ரூபாய்க்கும், ஒரு சவரன் 28 ஆயிரத்து 208 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் பெரிதாக மாற்றமில்லாத நிலையில், கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் 44 ரூபாய் 50 பைசாவுக்கும், ஒரு கிலோ 44 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Exit mobile version