தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்தது

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 184 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 23 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 846 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 184 ரூபாய் குறைந்து 30ஆயிரத்து 768 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 23 ரூபாய் குறைந்து 3ஆயிரத்து 689 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 184 ரூபாய் குறைந்து 29ஆயிரத்து 512 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளியைப் பொறுத்தவரை ஒரு கிலோ கட்டி வெள்ளி நேற்றைய விலையிலிருந்து 600 ரூபாய் குறைந்து 51 ஆயிரத்து 700 ரூபாய்க்கும், கிராமுக்கு 60 காசுகள் குறைந்து 51 ரூபாய் 70 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Exit mobile version