சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து  31 ஆயிரத்து 624  ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை  நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்தை சந்தித்துக் கொண்டே இருக்கிறது. அந்தவகையில் , சென்னையில் , 24 கேரட் தங்கத்தின் விலை  கிராம் ஒன்றுக்கு  29 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 151 ரூபாயாகவும்,  சவரன்  ஒன்றுக்கு  232 ரூபாய் அதிகரித்து 33 ஆயிரத்து 208 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.  22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 27 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 953 ரூபாயாகவும்,  சவரன் ஒன்றுக்கு 216 ரூபாய் அதிகரித்து 31 ஆயிரத்து 624 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையைப் பொருத்தவரை கிராம் ஒன்றுக்கு 1 ரூபாய் அதிகரித்து 51 ரூபாய் 60 காசுகளாகவும், கிலோ ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து 51 ஆயிரத்து 600 ரூபாயகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version