விருத்தாசலம் அருகே 27 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

விருத்தாசலம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட 27 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இருந்ததால் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரபல நகைக்கடை புதிய கிளை வரும்10 ந் தேதி திறக்கப்படவுள்ளது. இதற்காக அந்நிறுவன ஊழியர்கள் மூலம் கோவையிலிருந்து டெம்போவில் 27 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுடன் வந்த கொண்டிருந்தனர்.

விருத்தாசலம் அடுத்த பெரிய நெசலூர் பகுதியில் வந்துக்கொண்டிருந்த டெம்போவை தடுத்து நிறுத்தி அதிலிருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை, தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளுக்கு உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டதால், அவைகளை திரும்ப உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Exit mobile version